அரசு பள்ளி வளாகத்தில் ராட்சத தேன்கூடு - அகற்ற கோரிக்கை

Update: 2023-12-13 03:53 GMT

தேன் கூடு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மரத்தில், ராட்சத தேன்கூடு உள்ளதால், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கெங்கவல்லியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி சமையலறை அருகே உள்ள புளியமரத்தில், தேனீக்கள் ராட்சத கூடுகள் கட்டி உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் பலமுறை கூறியும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடுவலூர் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் 10 பேரை, விஷ வண்டுகள் கொட்டியதில் காயமடைந்தனர். எனவே, மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், பள்ளிவளாகத்தில் உள்ள ராட்சத தேன் கூட்டை அகற்ற உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News