தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம், கடத்துரான் கொட்டாய் பகுதியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கடத்துரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி செல்லம்மாள் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. நேற்று மாலை இருவரும் வேலை விட்டு திரும்பிய போது வீட்டின் வெளியே பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்திருந்தனர்.அவர்களது ஒரு வயது குழந்தை லட்சுமி தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை தண்ணீரில் தவறி விழுந்தது இதை கண்ட அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் குழந்தை மீது சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்தினர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.