டூவீலர் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து
டூவீலர் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
Update: 2024-03-20 17:15 GMT
கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, வாங்கல் மேல சக்கர பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் வயது 50. இவர் மார்ச் 18 ஆம் தேதி மாலை 5:30- மணி அளவில், கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, ராமேஸ்வர பட்டியில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தண்ணீர்பந்தல் பாளையம், கால்நடை மருத்துவமனை அருகே சென்றபோது, எதிர் திசையில்,கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து, சதாசிவம் ஒட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த சதாசிவத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சதாசிவம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அரசு பேருந்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி, விபத்து ஏற்படுத்திய சிவசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனவிசாரணை ,போலீசார் வழக்குப்பதிவு,விபத்து,ர் வாங்கல் காவல்துறையினர்.