அரியலூரில் அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து
அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனதில், மின்சாரம் இல்லாததால் பெருவிபத்து தவிர்க்கப்பட்டது.
அரியலூரில் இருந்து இருப்புலிகுறிச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து ராயபுரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. விபத்தில் 12 மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், மின்கம்பத்தில் மின்சாரம் செல்லாததால் பெருவிபத்து தவிர்க்கப்பட்டது.
அரியலூரில் இருந்து இரும்புலிக்குறிச்சிக்கு இன்று அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கல்லூரை சேர்ந்த தற்காலிக ஓட்டுநர் முருகானந்தம் 40 பயணிகளுடன் பேருந்தை இயக்கியுள்ளார். ராயபுரம் கிராமத்தைத் தாண்டி வளைவில் பேருந்து திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் இறங்கி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
அப்போது மின்கம்பத்தில் மின்சாரம் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த அரியலூரை சேர்ந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர் உமையாள், பெருமாள் சாவடியை சேர்ந்த தனக்கொடி, குன்னத்தைச் சேர்ந்த மேகலா, ஓக்கூத்தூரை சேர்ந்த சிறுமி யுவஸ்ரீ, சிறு கடம்பூரை சேர்ந்த சாரதி, நாகல்குழியை சேர்ந்த சகுந்தலா,
கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த சுதா, செந்துறையை சேர்ந்த ராமலிங்கம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில் ஏழு பேருக்கு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து செந்துறை கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், செந்துறை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்ற நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக உயர் சேதம் தவிர்க்கப்பட்டு, சிறு காயங்களுடன் அனைவரும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.