யூடியூபில் வீடியோ பார்த்து கொள்ளையடித்த பட்டதாரி !
யூடியூபில் கொள்ளை அடிப்பது எப்படி என்று வீடியோ பார்த்து கொள்ளையடித்த பட்டதாரி இளைஞர்கள் சிக்கி உள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு என்ற பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றில் பட்டதாரி இளைஞர்கள் கொள்ளையடிக்க முயன்ற போது அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்த போது தங்களுக்கு கடன் அதிகமாக இருந்ததாகவும் கடன் அனைத்தையும் அடைத்து விட்டு மிக வேகமாக பணக்காரராக வேண்டும் என்பதற்காக யூடியூப் இல் கொள்ளையடிப்பது எப்படி என்று வீடியோ பார்த்து அதன்படி கொள்ளை அடித்ததாகவும் ஆனால் தற்போது சிக்கிக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
திண்டுக்கல் அருகே உள்ள நிதி நிறுவனத்தில் உள்ள ஷட்டரை உடைத்து உள்ளே செல்ல முயன்றதாகவும் அப்போது அபாய ஒலி ஒலித்ததை அடுத்து அங்கிருந்து ஓட முயன்ற போது அந்த நிதி நிறுவனத்தின் செக்யூரிட்டி மற்றும் பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்ததாகவும் அதன் பிறகு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.