ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு
மஜீத் என்பவர் ஆட்டோ ஓட்டுகிறார்.இன்று அவர் ஆட்டோவில் பயணித்த பெண்கள் தங்களது செல்போனை ஆட்டோவில் மறந்து விட்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்களை தொடர்பு கொண்டு அவரது செல்போனை ஒப்படைத்தார்.;
Update: 2024-02-16 09:53 GMT
ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு
பழனியில் அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மஜீத் என்பவர் ஆட்டோ ஓட்டுகிறார். இன்று அவர் ஆட்டோவில் பயணித்த பெண்கள் தங்களது செல்போனை ஆட்டோவில் மறந்து விட்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து மஜீத் ஒரு மணி நேரத்தில் அந்தப் பெண்களை தொடர்பு கொண்டு அவரது செல்போனை ஒப்படைத்தார். இதனால் அந்தப் பெண்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.