கடம்பூர் வனத் தொட்டியில் தண்ணீர் குடிக்கும் யானை கூட்டம்
கடம்பூர் வனத் தொட்டியில் தண்ணீர் குடிக்கும் யானை கூட்டம்
Update: 2024-05-07 10:02 GMT
கடம்பூர் வனத் தொட்டியில் தண்ணீர் குடிக்கும் யானை கூட்டம் கடம்பூர் வனச்சரககத்தில் விலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட வனப்பப்பகுதிகளில்கடந்த பிப்ரவரி முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை மழையும் சரியாத பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் மான்கள், யானைகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதை தடுக்கும் வகையில் சத்தி புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்தில் உள்ள குன்றி பகுதியில் உள்ள வேடர் கண்ணப்பர் வேட்டை தடுப்பு முகாமிற்கு அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் லாரி மற்றும் டிராக்ட்கள் மூலம் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி சென்றனர். நேற்று தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்த யானைகள் தண்ணீர் குடித்தும், தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து உடல் முழுவதும் பீச்சியடித்தும் கோடை வெப்பத்தை தனித்து கொண்டு விளையாடி மகிழுந்தன.