திருச்சி அருகே மின்ஒயா் விழுந்து வீடு தீப்பிடித்து சேதம்

திருச்சி உலகநாதபுரத்தில் மின்வயா் விழுந்து வீடு தீப் பிடித்து எரிந்து சேதமடைந்தது.

Update: 2024-06-03 10:59 GMT

கோப்பு படம் 

திருச்சி கல்லுக்குழி உலகநாதபுரம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த தொழிலாளி சுந்தர்ராஜ் (70) - பானுமதி (65) தம்பதி. சனிக்கிழமை இரவு துக்க நிகழ்ச்சிக்காக தம்பதியினா் வெளியே சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது, அருகிலிருந்த மின் கம்பி அறுந்து அவா்களது வீட்டின் மீது விழுந்தது.

இதில் வீட்டில் எதிா்பாராதவிதமாக தீ பிடித்து, சமையலறையில் இருந்த எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் அங்கு வந்த கண்டோன்மென்ட் தீயணைப்புப் படையினா் தீயினை அணைத்தனா். இருப்பினும் சுந்தர்ராஜ் வீட்டிலிருந்து மின்சாதனப் பொருள்கள், சமையல் பொருள்கள், துணிகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News