பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்க உண்ணாவிரத போராட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிடி ஒ மற்றும் இளநிலை பொறியாளருக்கு மீண்டும் பணி வழங்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-01 10:43 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிடி ஒ மற்றும் இளநிலை பொறியாளருக்கு மீண்டும் பணி வழங்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்*

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மறையூர் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்ப ரூ 6 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். ஆனால் திறந்து வைத்த மூன்றே நாட்களுக்குள் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் கீழ் பகுதியில் சென்ற தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் பேருந்து நிறுத்தத்தை உடைத்துக் கொண்டு வெளியேறி புதியதாக திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் முழுவதும் சேதமடைந்தது.

பேருந்து நிறுத்தத்தை உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அடுத்து தவறான இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேலை உத்தரவு வழங்கியதாக நரிக்குடி பிடிஓ ராஜசேகரன்(வ.ஊ) மற்றும் இளநிலைப் பொறியாளர் பிரபா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து தொடர்ந்து பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரே அற்பக் காரணங்களுக்காக அநியாயமாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு பணியிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News