மதுரை விமான நிலையத்தில் குப்பைத்தொட்டியில் வீசிய ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் குப்பைத்தொட்டியில் வீசிய ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-12-08 13:21 GMT

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து பகல் 12:40 மணியளவில் மதுரை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகள் இறங்கி சென்றனர். சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மதுரைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட சுங்கஇலாகா வான் நுண்ணறிவு பிரிவினர்.

விமானத்தில் அந்த பயணியிடம் தீவிர சோதனையில் எந்தவித தங்கமும் சிக்கவில்லை. இதனை அடுத்து விமானத்தின் குப்பை கழிவுகளை சோதனை செய்வது வழக்கம். அதன் பேரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குப்பைகளாக சேகரித்த நான்கு மூடைகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு மூடையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது 899கிராம் மதிப்பு உள்ள தங்கப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூபாய் 56.50 லட்சம் ஆகும் இதனைத் தொடர்ந்து சுங்க இலக்க வான் நுண்ணறிவு பிரிவினர் பயணிகளின் வருகை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

அதில் எந்தவித தகவலும் சிக்காததையடுத்து கைப்பற்றப்பட்ட தங்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில் தொடர்ந்து கடத்தல் தங்கம் இரண்டாவது முறையாக குப்பையில் வீசப்படுவது குறிப்பிடத்தக்கது. 57 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் குப்பையில் வீசப்பட்ட தகவல் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News