100 அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு!

100 அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மற்றும் அதன் உரிமையாளரை மஞ்சுமல் பாய்ஸ் படப்பாணியில் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

Update: 2024-05-28 14:13 GMT

100 அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மற்றும் அதன் உரிமையாளரை மஞ்சுமல் பாய்ஸ் படப்பாணியில் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.


கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி(42).நேற்று மாலை அவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று 100 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது.அதனை மீட்பதற்காக கார்த்தி கிணற்றுக்குள் இறங்கியபோது 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் நிலைய அலுவலர் கார்த்திகேசன்,சுரேஷ் குமார்,சதீஷ் கண்ணன் வேல்முருகன் மோகன்ராஜ் உள்ளிட்ட வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கார்த்தி உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கத்தனர்.மேலும் கிணற்தில் விழுந்த ஆட்டுக்குட்டியையும் உயிருடன் மீட்டனர்.
Tags:    

Similar News