மேட்டூர் காவிரி ஆற்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன
மேட்டூர் அருகே செக்கானூர் காவிரி ஆற்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் மின் உற்பத்திக்காக செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை!ஊராட்சி கோட்டை,குதிரைக்கல் மேடு உட்பட ஏழு இடங்களில் கதவணைகள் அமைக்கப்பட்டுள்ளன. கதவணைகளில் சுமார் 0.50 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
மேட்டூர் அருகே உள்ள சொக்கனூர் கதவணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு குடிநீர் தேவைக்காக விடுவிக்கப்பட்டு வருகிறது. தேக்கப்பட்டு நீரில் அரஞ்சான், ஆறால் ,திலேபி, கறி மீன் உள்ளிட்ட பல வகையான மீன்கள் உள்ளன.
இன்று காலை அரஞ் சான், திலேபி கறி மீன் ஆகியவை மயங்கி இறந்து மிதக்கின்றன. டன் கணக்கில் மிதந்த மீன்களை மீனவர்கள் விற்பனைக்காகவும் கருவாடாக்கவும் கூடை கூடையாக அள்ளிச்சென்றனர். மேட்டூர் காவிரி ஆற்றில் தொடர்ந்து மீன்கள் இறந்து வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்களின் இறப்புக்கான காரணம் குறித்து அறிய மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்ட போது வெப்ப மாறுதல் காரணமாக இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
தேங்கி கிடக்கும் கதவனை நீரில் நேற்று இரவு பெய்த குளிர்ந்த மழை நீர் கலந்ததால் மயக்கமுற்று தாக்குப் பிடிக்க முடியாத மீன்கள் இறந்து மிதப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.