தீபாவளி சீட்டு நடத்தி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி வசூல் செய்த பணத்தை பொதுமக்களுக்கு திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-14 01:53 GMT

தீபாவளி சீட்டு நடத்தியவர் தற்கொலை

சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கத்தேரி ஊராட்சி சாமியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால்,(40) இவர் சாமியம்பாளையம், சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி(50) இருவரும் அப்பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடமிருந்து 13 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். இதில் கடந்த தீபாவளி அன்று வசூல் செய்த பணத்தை பொதுமக்களுக்கு திருப்பி கொடுக்க சீட்டு நடத்திய பழனிசாமியிடம் தனபால் பணம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து பழனிசாமி சீட்டு பணம் செலுத்தியவர்களுக்கு பணம் தராமல் வசூல் செய்த பணத்தை பழனிசாமி அவரது அக்கா காந்திமதி, அவரது கணவர் முனியப்பன் ஆகியோர்களிடம் கொடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனபால் அவரது தந்தை பெயரில் இருந்த வீடு, மனைவியின் தங்க நகைகள் தனது இருசக்கர வாகனம் ஆகியவைகளை அடமானம் வைத்து ஒரு பகுதி பணத்தை சீட்டு போட்ட சிலருக்கு பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். மேலும் சீட்டு போட்ட மீதி பேர் பணத்தை திருப்பி கொடுக்கமாறு வசூல் செய்த தனபாலிடம் தொந்தரவு செய்ததாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த தனபால் விரக்தியில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த தேவூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனபாலின் மனைவி மகேஸ்வரி தேவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சீட்டு நடத்தி வேலை செய்தவரையும் பொதுமக்களையும் ஏமாற்றியதுடன் தனபாலின் தற்கொலைக்கும் காரணமான பழனிச்சாமியை கைது செய்து சங்ககிரி குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News