அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் பலியானார்.;

Update: 2024-05-17 13:40 GMT

பேருந்து மோதி பலி

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகிலுள்ள சுனாமி காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார், இவர் கடல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் முத்தையாபுரம் மெயின் பஜாரில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வருவதற்கு இவரும் இவரது உறவினர் வேலு என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டு இருக்கும்பொழுது தீடீரென்று சாலையை கடக்க முயன்ற போது நாசரேத்திலிருந்து தூத்துக்குடி வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலே துடிதுடித்து பலியானார்.

Advertisement

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தையாபுரம் போலீசார் முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதியில், அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதாகவும், இப்பகுதியில் பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள். மேலும் இவ்விபத்து குறித்து முத்தையாபுரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்தது.

Tags:    

Similar News