குறுக்கே வந்த நாயால் நடந்த விபரீதம்
தவிட்டுப்பாளையத்தில் டூவீலரில் செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கிழக்கு தவிட்டுபாளையம் அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் குழந்தைவேல் ( 29). இவர் மே 25ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில், தவிட்டுப்பாளையத்தில் இருந்து தோட்டக்குறிச்சி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் தவிட்டுப்பாளையம் சிவா சேம்பர் அருகே சென்றபோது, திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே கடந்து சென்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் இதனை கவனித்த குழந்தைவேல், தனது வாகனத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். இதனால் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த குழந்தைவேலை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த குழந்தைவேலின் மனைவி மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான குழந்தைவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.