ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு.

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-12-19 13:51 GMT

தீக்குளிக்க முயன்றவர்

கோவை:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் தடாகம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வேலுச்சாமி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்ற நபரை தடுத்து நிறுத்திய போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்டனர்.அப்போது பேசிய வேலுச்சாமி தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தன் மகள் தடாகம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் நிலையில் வெற்றிவேல் என்ற வாலிபர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறியவர்

Advertisement

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாக தெரிவித்தார்.புகாரை பெற்று கொண்ட போலீசார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாடியவர் தனக்கு வேறு வழி தெரியாததால் தற்கொலைக்கு முயன்றாக கூறினார்.

இன்று காலை மனு அளிக்க வந்த முதியவர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் மற்றொருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News