கஞ்சாசெடி வளர்த்து பசுமாட்டிற்கு தீணியாக வைத்து வந்த நபர் கைது !
திருப்பத்தூரில் வீட்டின் பின்புறம் 7 அடி நீளமுள்ள கஞ்சாசெடி வளர்த்து பசுமாட்டிற்கு தீணியாக வைத்து வந்த வந்த நபர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-16 07:03 GMT
கஞ்சாசெடி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வீட்டின் பின்புறம் 7 அடி நீளமுள்ள கஞ்சாசெடி வளர்த்து பசுமாட்டிற்கு தீணியாக வைத்து வந்த வந்த நபர் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்டு பெரியார்நகர் பகுதியை சேர்ந்த ஆசிக்கான் மகன் பாபு வயது 43 இவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் சுமார் 7 அடி நீளம் கொண்ட கஞ்சா செடி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். மேலும் அந்த செடி கஞ்சாசெடி என்பது தெரியாமல் தினந்தோறும் அந்த கஞ்சா செடியை உடைத்து பசு மாட்டிற்கு தீணியாக வைத்து வந்துள்ளார் இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கஞ்சா செடியை பிடிங்கி காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து பாபுவை காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.