2 குழந்தைகளின் தாயை திருமணம் செய்த வாலிபர் !

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே 2 குழந்தைகளின் தாயை திருமணம் செய்த வாலிபர் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.;

Update: 2024-06-19 05:11 GMT

போலீசில் தஞ்சம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கோணகப்பாடி கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் (வயது 25). பத்திர பதிவு எழுத்தரிடம் வேலை செய்து வந்தார். இவருக்கும், புதூர் காடம்பட்டியை சேர்ந்த கணேசன் மனைவி லலிதா (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், லலிதாவின் கணவர் கணேசன் கொரோனா பாதிப்பில் இறந்ததாக தெரிகிறது.

Advertisement

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவர் இறந்த பிறகு லலிதா தன்னுடைய குழந்தைகளுகளுடன் தாரமங்கலத்தில் வசித்து வந்தார். மேலும் வேறு ஒரு பத்திர எழுத்தரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போதுதான் விஜய், லலிதா இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். லலிதாவுக்கு கல்லூரிக்கு செல்லும் வயதில் மகன் இருப்பதால் திருமணத்துக்கு விஜய் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இருந்தாலும் லலிதா, விஜய் இருவரும் சேர்ந்து வாழ போவதாக போலீசில் கூறியுள்ளனர். அதன்படி போலீசார் இருவரையும் லலிதாவின் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். திருமணாகி 2 குழந்தைகளின் தாயை போலீசாரின் உதவியுடன் வாலிபர் கரம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags:    

Similar News