வெண்ணந்தூர் ஒன்றிய திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

வெண்ணந்தூர் ஒன்றிய திமுக பாராளுமன்ற தேர்தல் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-30 15:34 GMT

கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயல்வீர்கள் கூட்டம் அத்தனூர் பாலாஜி மஹால் தனியார் திருமண மண்டபத்தில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம்பி கே.ஆர்.என். இராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஷ்குமார், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்களும் கலந்து கொண்டு கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிபெற்ற இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினார்கள். அ

ப்போது கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம்பி கே.ஆர்.என் ராஜேஷ் குமார் பேசும் போது பாஜக அரசு கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சொன்னார்கள் குறைக்க வில்லை. சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைப்பதாக சொன்னார்கள், ஆனால் சிலிண்டர் விலை ரூ.1000-ம் தாண்டியது. கல்வி கடன் தள்ளுபடி என சொன்னார்கள். அதையும் செய்யவில்லை. மாறாக அதானி,அம்பானி, நீரவ்மோடி போன்றவர்களின் வங்கிக் கடன்தான் தள்ளுபடி செய்யப்பட்டன. மத்திய பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் சொன்னது எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மணிப்பீரில் பெண்கள் பலர் மானபங்கப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டன. இதற்கெல்லாம் மத்திய பாஜக தான் காரணம். இதனை வாக்காளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இதே போல் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. இலவச மிக்ஸி, கிரைண்டர்,

மின்விசிறி கொடுத்தார்கள் எதுவும் தற்போது பயன்பாட்டில் இல்லை. ஆனால் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கொடுக்கப்பட்ட இலவச டிவி இன்றும் பல வீடுகளில் உள்ளது. ஜெயலலிதா இறப்புக்கு பின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கொடநாடு கொலை, கொள்ளை போன்றவை தான் அதிமுக செய்த சாதனை. என நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் இடத்தில் எடுத்து கூறினார்.

இக்கூட்டமானது ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் .ஆர்.எம். துரைசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட பொருளாளர் தேர்தல் பொறுப்பாளர் ஏகே.பாலசந்தர், அத்தனூர் பேரூர் கழக செயலாளர் கண்ணன் மற்றும் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் சேகர் பெரியசாமி, மாவட்ட கவுன்சிலர் ஏ.ஆர்.துரைசாமி சார்பு அணி அமைப்பாளர்கள் விஜயபாஸ்கர், திருமதி.கௌரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ரவீந்திரன், கிளை கழக செயலாளர்கள், கிளை பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News