ஆத்தூரில் தார்சாலை பணியை ஆய்வு செய்த நகரமன்ற உறுப்பினர்
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 26 ஆவது வார்டு முனியப்பன் கோவில் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை நகர மன்ற உறுப்பினர் ஆயுள் மேற்கொண்டார்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 09:41 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர்நகராட்சிக்கு உட்பட்ட 26வதுவார்டு முனியப்பன் கோயிலுக்கு முன்புறம், பெட்ரோல் பங்க் பின்புறம், கண்ணாடி மில் பகுதியில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தார்சாலை போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அப்பணியை 26 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவேந்திரன் ஆய்வு மேற்கொண்டு பணியை தூரிதமாக செயல்பட அறிவுறுத்தினார்.