மனநலம் பாதிக்கப்பட்டவர் குட்டையில் மூழ்கி குட்டையில் மூழ்கி பலி
சேலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் குட்டையில் மூழ்கி பலி
By : King 24x7 Website
Update: 2023-12-17 02:20 GMT
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் முருகன் (வயது 39). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் தனது தாயார் ருக்குமணியுடன் வசித்து வந்தார். இதனிடையே முருகன் நேற்று, காலை வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மாலை காரிப்பட்டி அருகே ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள குட்டையில் முருகன் பிணமாக மிதந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறை மற்றும் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முருகன் குட்டையில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.