மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
கரூர் மாவட்டம்,எஸ் வெள்ளாளப்பட்டி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வடக்கு பாளையம், மேல்பாகம், எஸ் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் மனைவி பழனியம்மாள் வயது 63. இவர் கடந்த இரண்டு வருடமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் குணமடையவில்லை. இந்நிலையில் அண்மை காலமாக அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது.
இதனால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்து வந்தவர், சிகிச்சை பலனின்றி ஜூன் 16ஆம் தேதி காலமானார்.
இந்த சம்பவம் அறிந்த பழனியம்மாளின் மகள் மல்லிகா வயது 48 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த பழனியம்மாள் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.