உழவர் சந்தையில் விற்பனைக்கு வந்த அதிசய வாழைப்பழம்
சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் விவசாயி ஒருவர் விற்பனைக்கு கொண்டு வந்த வாழைப்பழ சீப்பில் 42 வாழைப்பழங்கள் இருந்ததை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.;
Update: 2024-04-22 04:33 GMT
வட்ட வடிவ வாழை பழ சீப்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 45). விவசாயி. இவர் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை இவர் உழவர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த பூ வாழை ரக சீப் ஒன்று மிகப்பெரிய அளவில் இருந்தது. வழக்கமாக ஒரு வாழை சீப்பில் சுமார் 20 பழங்கள் வரை இருக்கும். ஆனால் அந்த விவசாயி கொண்டு வந்த வாழைத்தாரில் ஒரே சீப்பில் 42 வாழைப்பழங்கள் இருந்தன. மேலும் அதன் எடை 3 கிலோ இருந்தது. இந்த வாழைப்பழ சீப்பை சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.