வீட்டின் முன் கதவை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்
உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றவரின் வீட்டின் முன் கதவை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர். காவல்துறை வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 06:35 GMT
கதவை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர் போலீசார் வழக்கு
கதவை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர் போலீசார் வழக்கு
கரூர் மாவட்டம்,ஏமூர் அருகே லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 6 மணி அளவில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் ஐந்தாம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் முன் கதவை உடைத்து, வீட்டிற்குள் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 17 ஆயிரத்தை மர்மநபர் களவாடி சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில், பொருத்தியுள்ள சிசிடிவி கேமராக்களில் மர்ம நபர் குறித்து பதிவுகள் கிடைத்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.