நெல்மணிகளை காப்பாற்ற புதிய ஐடியா!
சிங்கம்புணரி அருகே கிணற்றுப் பாசனம் மூலம் விளைவிக்கப்பட்ட நெற்பயிர்களை கிளிகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் கிளி பொம்மைகளை பயன்படுத்தி வருகின்றனர்.;
சிங்கம்புணரி அருகே கிணற்றுப் பாசனம் மூலம் விளைவிக்கப்பட்ட நெற்பயிர்களை கிளிகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் கிளி பொம்மைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி அருகே கிணற்றுப் பாசனம் மூலம் விளைவிக்கப்பட்ட பயிர்களை கிளிகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் கிளி பொம்மைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தாலுகாவில் இந்தாண்டு முழு அளவில் விவசாயம் நடைபெறாத நிலையில் சில இடங்களில் மட்டும் கிணறு, போர்வெல் தண்ணீரை கொண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் ஓரிரு இடங்களில் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் வழக்கம்போல் மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக கிளிகள் கூட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எங்கிருந்தோ வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளிகள், கூட்டமாக நிலங்களுக்குள் புகுந்து விளைந்துள்ள தானியங்களை தின்று விடுகிறது.
விதைப்பின் போதே நெல்மணிகளை தின்று காலிசெய்த நிலையில் தற்போது முளைத்திருக்கும் நெல்மணிகளையும் கிளிகள் அழிக்க துவங்கியுள்ளது. இதனால் கிளிகள் வருவதை விவசாயிகள் நுாதன முறையில் தடுத்து வருகின்றனர். வயலில் பயிர்களுக்கு மேல் கயிற்றில் கிளி பொம்மைகளை கட்டி தலைகீழாக தொங்க விட்டுள்ளனர். இதை பார்க்கும் கிளிகள் பயத்தில் அப்பகுதிக்கு வருவதில்லை, இதனால் பயிர்களை காப்பாற்ற முடிகிறது என்கிறார்கள் விவசாயிகள்.