மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சாவு
சேலம் மாவட்டம் ,நைனாம்பட்டியில் மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-04-24 06:35 GMT
வடமாநில தொழிலாளி மரணம்
பீகார் மாநிலம் லதாத்தா மாவட்டம், ஜான் ஜலம்பூர் பகுதியைச் சேர்ந்த பிலாஸ் மகன் ரஞ்சன் (வயது 35). இவர் எடப்பாடி அடுத்த நைனாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மர ஆலையில், மரம் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆலையின் ஒரு பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் தங்கி இருந்து ரஞ்சன் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு தூங்குவதற்காக அவர் குடியிருந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மதுபோதையில் இருந்த ரஞ்சன் கால் தவறி அங்கிருந்து கீழே விழுந்ததால் பலத்த காயமடைந்தார். காயம் அடைந்த ரஞ்சனை சக தொழிலாளர்கள் மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் ரஞ்சன் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில தொழிலாளி ஒருவர் மாடியில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.