கரூர் அருகே விபத்து
பெரியார் ஆர்ச் அருகே சரக்கு வாகனத்தில் இருந்து பஞ்சுமூட்டை டூவீலர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-15 13:29 GMT
கோப்பு படம்
பெரியார் ஆர்ச் அருகே சரக்கு வாகனத்தில் இருந்து பஞ்சுமூட்டை டூவீலர் மீது விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, கடம்பன்குறிச்சி அருகே உள்ள பெரிய வரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய மாதவன் வயது 48. இவர் ஜூன் 11ஆம் தேதி மதியம் 2:40 மணியளவில், கரூர்- மதுரை சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் பெரியார் ஆர்ச் அருகே சென்றபோது, இவருக்கு முன்னால், பஞ்சுலோடு ஏற்றி சென்ற வாகனத்திலிருந்து விழுந்த பஞ்சு மூட்டை ஆரோக்கிய மாதவன் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆரோக்கிய மாதவனை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆரோக்கிய மாதவன் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்து ஏற்படும் வகையில் சரக்கு வாகனத்தை ஓட்டிய சாமுவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.