வேடசந்தூர் அருகேசுற்றுச்சூழல் மேம்பாட்டை உருவாக்கும் ஊராட்சி
அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதோடு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது திண்டுக்கல் அருகே வி.புதுக்கோட்டை ஊராட்சி.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட வேடசந்தூர் அருகே 15 குக்கிராமங்களுடன் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் உள்ள 1,450 வீடுகளில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை மீட்டெடுத்த நிலையில்,
அவற்றைச் சொந்த செலவில் குத்தகைக்கு எடுத்து, அடர்குறு வனங்களை உருவாக்கியதோடு, காய்கனிகள் சாகுபடி செய்து அரசுத் துறைகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் ஊராட்சி மன்றத் தலைவரான ச.குப்புசாமி. அவரிடம் பேசியபோது: ""ஊராட்சியிலுள்ள வீடுகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு,
90 சதவீதம் வீடுகளில் கழிவறை வசதி, அரசு அலுவலகக் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், இரு பாலர் மாணவர்களுக்குத் தனித்தனி கழிவறைகள், குடிநீர் வசதிகளோடு, மக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.