தம்மம்பட்டி: லாட்டரி விற்றவர் அதிரடி கைது

தம்மம்பட்டியில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-17 16:43 GMT

கோப்பு படம்

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அடுத்த ஜோதி நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். லாட்டரி சீட்டு விற்பனை செய்வது குறித்து, தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது விஜயகுமார் (40) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவர, அவரை கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News