வேலை வாங்கித் தருவதாக பண மோசடி ஈடுபட்டவர் கைது
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-22 12:13 GMT
நீதிமன்றத்தில் எழுத்தர் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்த வழக்கில் அரசு ஊழியர்களான கணவன், மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸôர் வியாழ க்கிழமை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் கோரைப்பள்ளத்தை சேர்ந்தவர் முத்து இருளா ண்டி மகன் தோப்பாடி முத்து(34). பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், விவசாய பணிகள் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 இல் வன்னிமுத்து என்பவர் மூலம், தோப்படி முத்துவுக்கு அரசு மருத்துவமனையில் தொழுநோய் பிரிவு சுகாதார ஆய்வாளராக பணி புரியும் கிருஷ்ணசாமி அறிமுகமாகியுள்ளார். அப்போது கிருஷ்ண சாமி, தனது மனைவி சசி பாலவநத்தம் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிவதாகவும், மகள் பாலமீனலோச்சனி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மருத்துவ ராக பணி புரிந்து வருவதாகவும் தெரிவித்தாராம். மேலும் உயர்நீதிமன்றத்தில் எழுத்தர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். எனக்கும் குடும்பத்தினருக்கும் ஏராளமான வழக்குரைஞர்கள், நீதிபதிகள் பழக்கம் உள்ளது. அதனால் உங்களுக்கு அந்த பணியை வாங்கி தருவதாக கிருஷ்ணசாமி தோப்படி முத்து விடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தோப்படி முத்து, கிருஷ்ணசாமி அவரது மனைவி, மகள் ஆகியோரிடம் ரூ. 8 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் மூவரும் போலி பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து தோப்படி முத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா விடம் புகார் மனு அளித்தார். இந்த மனுவின் அடிப்படை யில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து அரசு ஊழியர்களான கணவன், மனைவி ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.