பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது

அரவக்குறிச்சி பகுதியில் பல்வேறு திருட்டு வழக்கில் கைதான நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.;

Update: 2024-01-14 03:47 GMT

கார்த்திக் 

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, அரிட்டாப்பட்டி பகுதியைச் சேர்ந்த நல்லையன் மகன் காக்கப்பன் என்ற கார்த்திக் 30 என்பவர், கடந்த சில மாதங்களாக,கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கடந்த மாதம் கார்த்திக்-ஐ கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

இவரது குற்ற செயல்கள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பேரில், கார்த்திக் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவிட்டதன் பேரிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பரிந்துரை பேரிலும், அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நாகராஜன் பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்ட கார்த்திக் மீது நேற்று குண்டாஸ் வழக்கு பதிவு செய்தார். இது தொடர்பான அறிவிப்பை, திருச்சி மத்திய சிறையில் உள்ள கார்த்திக்கிற்கு  வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News