இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து பலி !

நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-04-03 05:42 GMT

விபத்து

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள செந்துறையைச் சேர்ந்தவர் கந்தன் இவருடன் அதே ஊரைச் சேர்ந்த முனுசாமி (52) என்பவர் இருச்சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கடந்த 23-ஆம் தேதி நத்தம் வந்தனர். பின்னர் ஊரை நோக்கி இருவரும் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது பின்னால் அமர்ந்திருந்த முனுசாமி தவறி விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்தவர் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று முனுசாமி இறந்து போனார். இது குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News