சங்கராபுரம் பகுதியில் மது விற்பனை செய்த ஒருவர் கைது !!
தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-05-25 07:23 GMT
தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போடி காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய சோதனையில் அதே பகுதியைச் சேர்ந்த கண்மணி பாரதி என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 17 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.