ஆரணியில் வெடி பொருட்கள் வைத்திருந்த நபர் கைது!

நேத்தப்பாக்கம் கிராமத்தில் வெடி பொருட்கள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-07 13:01 GMT

கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் உரிமம் இன்றி பட்டாசு தயாரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வாணவெடி தயாரிக்க கூடிய குச்சிகள், குப்பிகள், வெடி பொருட்கள், மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இதனையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து துலுக்கானம் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News