அத்துமீறி லாட்டரி விற்பனை செய்த நபர் கைது

நாகப்பட்டிணத்தில் அத்துமீறி லாட்டரி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த ரூ. 76,200 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-01-25 03:37 GMT

 நாகப்பட்டிணத்தில் அத்துமீறி லாட்டரி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த ரூ. 76,200 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப., உத்தரவின் பேரில் மாவட்டம் முலுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை முழுவதுமாக கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்று (24.01.2024) உதவி ஆய்வாளர் திரு G.பாலமுருகன் அவர்களின் தலைமையிலான தனிப்படை நடத்திய அதிரடி சோதனையில் கீழ்வேளுர் காவல் நிலைய சரகத்திற்க்கு உட்பட்ட சிக்கல் கடைத்தெரு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட சிக்கல் கண்ணையன் மகன் அம்பிகாபதி (48) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரிடமிருந்து ருபாய் 400/- பணம் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த 72,200/- ருபாய் மதிப்புடைய (விஷ்ணு,தங்கம்,குமரன்,நல்லநேரம்,ரோஜா) ஆகிய லாட்டரி சீட்டுகள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு சிறப்புடன் செயல்பட்ட தனிப்படை காவல்துறையினரை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஹர்ஷ் சிங், பாராட்டினார்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.

Tags:    

Similar News