புளியங்குடி அருகே செல்போன் திருடியவர் கைது
புளியங்குடி அருகே பைக்கில் வைக்கப்பட்ட செல்போனை திருடியவரை சேர்ந்தமரம் போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-01-03 06:38 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே பாண்டியாபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் பைக்கில் செல்போனை வைத்து சென்றுவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது அவைகளை காணவில்லை என தெரியவந்தது, இது குறித்து புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு செல்போன் திருடிய ஆனைகுளத்தை சேர்ந்த அவுலியா மைதீன் (43) என்பவர் தெரியவந்தது அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே பல திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து சேந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.