செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்ப்பட்டது.;

Update: 2024-04-17 08:49 GMT

தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ராமநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பெருமாள் (46) இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி தென்பாதி கீனியபிறை பகுதியை சேர்ந்த ஜெயசூரியன் மகள் சாந்தி(37) ஆகிய இருவருக்கும் இரண்டாம் தாரமாக திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றது.

Advertisement

இந்நிலையில் கணவன் ஊரான சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ராமநாயக்கம்பாளையத்தில் சாந்தி வசித்து வந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி கோபித்துக் கொண்டு தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலிக்கு சென்று விட்டதாகவும் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு பெருமாள் தனது மனைவி வீட்டில் கூறியுள்ளார்.

அதன்படி சாந்தி தந்தை வீட்டில் உள்ள உறவினர்கள் கனவனுடன் சேர்ந்து வாழுமாறு சாந்தியிடம் கூறியும் சாந்தி தான் பிரிந்து தான் இருப்பேன் நான் போக மாட்டேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெருமாள் கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கத்தில் உள்ள 50 அடி உயரம் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தன் மணைவியுடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் இல்லையென்றால் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெருமாள் மைத்துனர் முனியன் பெருமாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பெருமாள் மைத்துனர் முனியன் மற்றும் கறம்பக்குடி தீயணைப்புத் துறையினரும் செல்போன் டவர் மீது ஏறி பெருமாளை பத்திரமாக மீட்டனர்.

தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News