அருமனை அருகே அரசு நிலத்தில் ரப்பர் மரம் வெட்டி கடத்த முயன்ற நபர் கைது

அருமனை அருகே அரசு நிலத்தில் ரப்பர் மரம் வெட்டி கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-13 11:14 GMT

வெட்டப்பட்ட ரப்பர் மரம்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கடையாலுமூடு வலிய ஏலா பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் ரப்பர் மரங்கள் உள்ளன. இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டி கடத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தாசில்தார் குமரவேல் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.அப்போது 30க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன. மேலும் சிலர் மரங்களை வெட்டி கொண்டு இருந்தனர். இது தொடர்பாக கடையாலுமூடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடம் சென்று, மரத்தை வெட்டி கடத்த முயன்ற வலிய ஏலா கீழ்க்கோணம் பகுதியைசேர்ந்த ஜஸ்டின் ராஜ் மற்றும் பணியாளர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். 

களியல் கிராம அலுவலர் சதீஷ் குமார் புகாரின் பேரில் ஜஸ்டின் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் மற்ற பணியாளர்களை விடுவித்தனர். ₹35 ஆயிரம் மதிப்பிலான 4 டன் ரப்பர் மரங்கள் வெட்டப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News