காரில் கொண்டு வரப்பட்ட கதர்துண்டு,கட்சி மப்ளர், சால்வை பறிமுதல்
லால்குடி அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட இந்திய ஜனநாயக கட்சியின் கதர்துண்டு,கட்சி மப்ளர், சால்வையை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-04-01 08:01 GMT
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பைபாஸ் சாலையில் பறக்கும் படை அணியின் இ பிரிவினர் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது இந்திய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த கதர் துண்டு 24 ஐஜேகே கட்சி மாப்பிளர் சால்வை 11 ஆகிய பரிசு பொருட்களை பறக்கும்படை அணியினரால் பறிமுதல் செய்யப்பட்டு லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.