நில முகவர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசில் புகார்

குமாரபாளையம் நில முகவர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

Update: 2023-12-03 13:19 GMT

காவல் நிலையத்தில் மனு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்க தலைவராக சின்னுசாமி செயல்பட்டு வருகிறார். இவருக்கு கொலை  மிரட்டல் விடுத்த நபர் மீது, சங்கம் சார்பில் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது : இந்த சங்கத்தில் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எங்கள் சங்கத்தின் 5ம் ஆண்டு துவக்க விழா, பெயர்ப்பலகை திறப்பு விழா  சமீபத்தில் நடந்தது. பெயர்ப்பலகை சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ளது.

அதனை அழகுப்படுத்தி பூங்கா போல் அமைக்க சிறிய மேடை அமைக்கப்பட்டது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பக்கெட் கணேசன் என்பவர், சங்கத்திற்கு சமாதி கட்டுகிறீர்களா? உங்கள் சங்க தலைவருக்கும் சமாதி கட்டாமல் விட மாட்டேன் எனவும் சங்க நிர்வாகிகளிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து கணேசனிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணியிடம் மனு கொடுக்கும் போது சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News