அன்புக்கரங்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கிய காவல் ஆய்வாளர்
பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் அன்புக்கரங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினார்
By : King 24x7 Website
Update: 2024-01-02 16:12 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் செயல்படும் அன்புமலர் அன்புகரங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினார். மேலும் புதிதாக பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய வகையிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என அங்குள்ள குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் ..