சோழவந்தானில் இளம் பெண் மாயம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 17 வயது இளம் பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-22 05:03 GMT
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தகுளம் கிராமத்தில் வசிக்கும் ராஜாங்கம் என்பவரின் 17 வயது மகள் நேற்று முன்தினம் (டிச.20) மாலை 4 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தந்தை அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று ( டிச.21) புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Similar News