தனியார் தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்து: 15 பேர்கள் காயம்
தனியார் தொழிலாளர்கள் சென்ற வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி 15 பேர் படுகாயம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரியும் தொழிலாளிகள் வேலை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வேனில் திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் குமாரபுரம் அருகே சென்றபோது எதிரே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் குடும்பத்தினர் காரில் வந்த போது மாடு குறுக்கே வந்ததால் கார் சாலையில் வலது பக்கமாக ஏறி சென்றது. அப்போது எதிரே வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இடதுபுறம் சென்று பல்டி அடித்து நின்றது. இதில் வேனில் வந்த ஜவுளிக்கடை மூன்று ஆண்கள் 12 பெண்கள் உட்பட15 பேர் படுகாயம் அடைந்தனர். படுக்காயம் அடைந்தவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ குறித்து தகவல் தெரிந்த பணியாளர்களின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் திரண்டதால் மருத்துவமனை வளாகம் சோகத்தில் ஆழ்ந்தது. திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் போதுமான இயற்கை வசதி இல்லாததால் காயமடைந்த சில பெண் பணியாளர்கள் வெளியே உட்கார வைக்கப்பட்டனர். அப்போது பெற்றோர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என ஜவுளி கடை உரிமையாளரிடம் ஆத்திரமடைந்ததால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.