மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தனியார் ஆலை
Update: 2023-12-12 06:06 GMT
கல்வி ஊக்க தொகை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மதுரா கோட்ஸ் ஆலை சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆலை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆலை நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லகன் பால், ஆலை உற்பத்தி இயக்குநர் பிரபீர சக்கரபர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் 63 மாணவர் மாணவிகளுக்கு தலா ரூ.50000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.