கிராமத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு
கிராமத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு;
By : King 24x7 Website
Update: 2024-01-09 08:27 GMT
கிராமத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தில் கோழியை விழுங்கிய நிலையில் பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.மறவாமதுரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அ. பொன்னையா இவரது வீட்டின் முன் இருந்த கோழியை சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று விழுங்கிய நிலையில் காணப்பட்டது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ரா.மணிகண்டன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்தப் பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர்.