தக்கலை அருகே கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு சிக்கியது
தக்கலை அருகே கோழி கூட்டில் புகுந்து கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு சிக்கியது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-21 12:01 GMT
பிடிபட்ட மலைப்பாம்பு
தக்கலை அருகே அப்பட்டுவிளையை சேர்ந்தவர் மரிய அந்தோணி. அவரது வீட்டில் உள்ள கோழி கூட்டிற்குள் மலைப் பாம்பு ஒன்று புகுந்து கோழிகளை விழுங்கி கொண்டு இருந்தது. இது குறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையி லான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கோழிக்கூட்டிற்குள் இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் மலை பாம்பை 'புலியூர்குறிச்சி உதயகிரி கோட்டை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.