நெல்லையில் துப்பாக்கியுடன் சுற்றிய ரவுடி கைது
நெல்லையில் துப்பாக்கியுடன் சுற்றிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-01-27 04:05 GMT
நெல்லையில் துப்பாக்கியுடன் சுற்றிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகன் ஜேக்கப் (32). இவர் மீது 6 கொலை வழக்குகள், 3 கொலைமுயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஜேக்கப் மீது பெண் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றி வருவதாக புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று தாழையூத்து போலீசார் ஜேக்கபை துப்பாக்கியுடன் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.