ட்ராபிக் சிக்னல் அமைக்க கோரிக்கை

சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சிக்குட்பட்ட பாரேரி,திருத்தேரி பகுதி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் டிராபிக் சிக்னல் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கபப்ட்டது.

Update: 2024-02-07 07:17 GMT

ஆட்சியரிடம் மனு 

சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் திருத்தேரி,பாரேரி சாலை சந்திப்பில் போக்குவரத்து சமிக்ஞை இல்லாததால் இந்த சாலையை கடந்து பணிகளுக்கு செல்வோரும், பள்ளிகளுக்கு செல்லும் மாணாக்களும், முதியோர்கள், குழந்தைகள், பெண்கள் என அன்றாட தேவைகளுக்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் வாழக்கூடிய ஆயிரகணக்காண மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இப்பகுதியில் மிகப்பெரும் விபத்துகள் நடைபெறுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இந்த ஊராட்சியில் வாழக்கூடிய மக்களின் உயிரை கருத்தில் கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் ஏரியாத காரணத்தினால் பல விபத்துகள் ஏற்பட்டு பல குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது..எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் மாநில செய்தி தொடர்பாளர் சிங்கை கணேஷ் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜிடம்  மனு அளித்தார்.

Tags:    

Similar News