சேத்துப்பட்டில் முத்தமிழ் தேருக்கு எழுச்சிமிகு வரவேற்பு

சேத்துப்பட்டு காமராஜர் பேருந்து நிலையத்தில் கலைஞர் பேனா வடிவிலான முத்தமிழ் தேருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-12-03 13:16 GMT

சேத்துப்பட்டில் முத்தமிழ் தேருக்கு எழுச்சிமிகு வரவேற்பு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு கலைஞரின் பேனாவடிவிலான முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியைசேத்துப்பட்டு காமராஜர் பேருந்து நிலையம் முன்பு திமுக நகர செயலாளர் இரா முருகன் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து மலர் தூவிவரவேற்றார்.தொடர்ந்து முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ சிலைக்கும் தாயார் அஞ்சுகம் அம்மையார் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முத்தமிழ் தேரினை பார்வையிட்டு கலைஞரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சுதா முருகன்,மாவட்ட இலக்கிய அணி தலைவர் சேகர்,மாவட்ட மருத்துவர் அணி தலைவர் சுரேஷ்,நகர துணை செயலாளர்,வேளாங்கண்ணன், ஜெயந்தி ராமகிருஷ்ணன்,நகர பொருளாளர் ஆறுமுகம்,கிளைச் செயலாளர் கன்னியப்பன்,மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் புனிதா பன்னீர்செல்வம்,

தகவல் தொழில்நுட்ப செயலாளர் சந்தோஷ்,தொகுதி வலைதள பொறுப்பாளர் சரவணன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் திமுக நகர நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பட விளக்கம். சேத்துப்பட்டு பேரூராட்சி காமராஜர் பேருந்து நிலையத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா பேனா வடிவிலான முத்தமிழ் தேரை திமுக நகர செயலாளர் மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்றார்.

Tags:    

Similar News