அன்னவாசல் அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு!
அன்னவாசல் அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்தான்.;
Update: 2024-02-06 10:08 GMT
பைல் படம்
அன்னவாசல் அருகே உள்ள அண்ணாநகர் முல்லை கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிளில் மரிங்கிப்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அன்னவாசல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.